ஏனைய ஐந்து சீன பிரஜைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை – தேசிய தொற்று நோயியல் நிறுவகம்!

Thursday, January 30th, 2020

ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில், கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட சீன பெண்ணைத் தவிர்ந்த ஏனைய ஐந்து சீன பிரஜைகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அரச மருத்துவ ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அரசு மருத்துவ ஆய்வகத்தின் அறிக்கை நேற்றைய தினம் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்திற்கு நேற்று கிடைக்கப்பெற்றது.

இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்ற 8 பேரும், அங்கிருந்து சிகிச்சைபெற்று வெளியேறியுள்ளனர்

இதேநேரம், இலங்கையில் கொரோனா தொற்று முதல் முறையாக அடையாளம் காணப்பட்ட சீன பெண்ணின் உடல்நிலை தற்போது தேறிவருவதாக தெரிவிக்கப்படுகிறது

எவ்வாறிருப்பினும், நேற்று மாலை இரண்டு பேர் சிகிச்சைக்காக ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக சர்வதேச தர நியமங்களுக்கு அமைய சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் இது குறித்த அவசியமற்ற வகையில் அச்சமடைய தேவையில்லை என பிரதமர் காரியாலயம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பழங்குடியின தலைவரான வன்னில எத்தன் தெரிவித்துள்ளார்.

மஹிங்கணையில் வைத்து நேற்று கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: