குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் – மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, November 30th, 2023

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத அளவிற்கு குவிந்துள்ளதாக  அவர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சுப்பொறிகள் கடந்த திங்கட்கிழமை தமக்கு கிடைத்ததாகவும், அதன்படி இந்த வாரத்தில் இருந்து அச்சிடும் நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

ஓட்டுநர் உரிமம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்பவர்கள், தரகர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக நாளொன்றுக்கு 700 முதல் 800 ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

அதற்கு ஒருவரிடமிருந்து 5000 ரூபாய்க்கு மேல் பெறுவதாகவும் சம்பந்தப்பட்ட மோசடி அதிகாரி வாரத்திற்கு 10 முதல் 20 இலட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பார். அரசியல்வாதி ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அதிகாரி ஒருவரும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: