மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு!

Tuesday, January 5th, 2021

மீண்டும் இலங்கையில் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000 ரூபா நாணயத்தாள்கள் மீண்டும் அச்சிடப்படவுள்ளதாக அவர் குநிப்பிட்டுள்ளார்.

நாணயத்தாள்களின் 11 ஆவது வெளியிடுகையாக இது 2021 இல் அச்சிட்டு வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மஹிந்த ராஜபக்ச முன்னைய அரசாங்கத்தின் நிதியமைச்சராக இருந்தபோதே 2000 ரூபா நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதேவேளை 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் மத்திய வங்கி நாணயத்தாள்களை அச்சிட ஆரம்பித்தபோது இலங்கை ரூபாவின் டொலருக்கு எதிரான பெறுமதி 4 ரூபா 70 சதமாக இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:

நிறுவனங்களின் தேவைக்கமைய சேவைமுடிவுறுத்தப்படும் ஊழியர்களுக்கான இழப்பீடு 25 இலட்சமாக அதிகரிப்பு - அமை...
22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது - சமுர்த்தி இரா...
எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் - விரைந்து அட்டைகளை பெற்றுக்கொள்ளுங்கள் - யாழ் மாவட்ட மக்கள...