சுகாதாரமற்ற 30 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Saturday, August 27th, 2016

உணவுச்சட்டத்தை மீறும் வகையில் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்த கொழும்பிலுள்ள சுமார் 30 உணவகங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதாரத் திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை (26) தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தின் போது, சுமார் 100க்கும் மேற்பட்ட ஹொட்டல்கள், உணவகங்கள் மற்றும் நட்டத்திர விடுதிகள் போன்றவற்றில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன்போது காலாவதியான உணவு வகைகளும் சுகாதாரமற்ற உணவு வகைகளும் உணவகங்களில் விற்பனை செய்யப்படுகின்றமை குறித்து கண்டறியப்பட்டது. எனினும் அதிகமான உணவகங்கள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரமற்ற நிலையில் உணவுகளை விற்பனை செய்த 30 உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts: