இதுவரை 4658 பேர் இராணுவத்திலிருந்து விலக விண்ணப்பம்!

Wednesday, December 28th, 2016

சட்டரீதியாக அனுமதி பெறாமல் விடுமுறையில் இருக்கும் பெரும் எண்ணிக்கையிலான முப்படையினர் தமது சேவை தலைமையகத்திற்கு சமூகமளித்து சட்டபூர்வ ஆவணங்களை சமர்பித்து சட்ட ரீதியாக இம்மாதத்திற்குள் விலகிச் செல்வதற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்ட ஒரு மாத கால பொதுமன்னிப்பு காலம் இம்மாதம் (டிசம்பர்) 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை (டிசம்பர்.26 வரை) 7 இராணுவ அதிகாரிகள் அடங்கலாக 4658பேர் உத்தியோக பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகிக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர். மேலும் 2 கடற்படை அதிகாரிகள், 424 கடற்படை வீரர்கள், 16 விமானப்படை அதிகாரிகள் 195 விமானப்படை வீரர்கள் ஆகியோர் சட்ட ரீதியாக விலகிச் செல்லவதற்கான அனுமதியினை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் பாதுகாப்பு ஊடக மையத்தின் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவத்துள்ளார்.

இப்பொது மன்னிப்பானது இவ்வருடம் முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பொதுமன்னிப்புக் காலம் என்பதோடு முதலாவது பொதுமன்னிப்புக் காலம் ஜூன் 13 இலிருந்து ஜூலை 12 வரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சேவையிலிருந்து விலக விரும்பும் படை வீரர்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சேவை மையங்களுக்கு அறிக்கையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

06-6-70

Related posts: