வியாழன், வெள்ளிக் கிழமைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்புக் களத்தரிசிப்பு !

Wednesday, February 21st, 2018

டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி நாளை மறுதினம் வியாழனும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் யாழ். வண்ணார்பண்ணை மற்றும் நாவாந்;துறைப் பகுதிகளில் களத்தரிசிப்புக்கு ஏற்பாடாகியுள்ளது என யாழ். மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்துள்ளார்.

அதன்படி நாளை மறுதினம் வியாழன் வண்ணார்பண்ணை (துஃ97இதுஃ101) கிராம அலுவலர் பிரிவுகளிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாவாந்துறை (துஃ86இ துஃ87) கிராம அலுவலர் பிரிவுகளிலும் களத்தரிசிப்பு இடம்பெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார வைத்திய அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: டெங்கு நுளம்புப் பெருகக் கூடிய சூழலை அகற்றி டெங்கு தாக்கத்திலிருந்து எம்மை பாதுகாக்கும் முகமாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். இதன்மூலமே அதிகரித்துவரும் டெங்குநோய் தாக்கத்திலிருந்து விடுபட முடியும். இந்தத் தேசிய நிகழ்வு அதன் நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்திட சகலரும் ஒத்துழைப்பு வழங்கி தங்கள் தங்கள் வாழிடங்கள், சமய நிறுவனங்கள், அரச தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுச் சந்தைகள், மயானங்களின் சுற்றுச்சூழலை துப்புரவாகப் பேணுமாறு அறிவுறுத்துகின்றோம். இம்முறை டெங்குப் பெருக்கத்திற்கு சாதகமான நிலைமைகள் காணப்படும் அனைத்து அரச, தனியார் நிறுவனங்கள், மற்றும் பாடசாலைகள், வீடுகள், மண்டபங்கள், ஆலயங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே தங்கள் சூழலை டெங்கு பெருகாதவாறு சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.

Related posts: