137 ஆண்டுகளுக்குப் பின்  காலநிலையில் மாற்றம் – நாசா

Tuesday, April 18th, 2017

தற்போது இலங்கை இந்தியா  உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அதிகளவிலான வெப்பநிலை காணப்படுகின்றது.இந்த நிலையில், கடந்த 137 ஆண்டுகளிலேயே அதிக வெப்பம் நிலவிய இரண்டாவது மாதமாக மார்ச் மாதம் பதிவாகியுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையினை அமெரிக்க வானவியல் ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது. ‌அந்த புள்ளி விபரங்களின் படி கடந்த 137 ஆண்டுகளில் வெப்பம் மிகுந்த 2 ஆவது மாதமாக 2017ஆம் ஆண்டின் மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதிவாகியிருந்த வெப்பநிலையை விட 0.15 டிகிரி வெப்பம் குறைவாக காணப்படுவதாக நாசா மேலும் தெரிவித்த்துள்ளது.

Related posts: