மனித பாவனைக்கு ஏற்ற அரிசியில் விலங்குகளுக்கு தீவன உற்பத்தி – அதிகாரிகள் சுற்றிவளைப்பு!

Monday, September 12th, 2022

மனித பாவனைக்கு ஏற்ற அரிசியைப் பயன்படுத்தி அரசாங்க கால்நடை பண்ணை ஒன்று கால் நடைகளுக்கு தீவனம் உற்பத்தி செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் நுகர்வோர் அதிகாரசபையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது  குறித்த பண்ணைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கால்நடை தீவன உற்பத்திக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பத்தாயிரம் கிலோ அரிசியை நுகர்வோர் அதிகார சபையினர் கையகப்படுத்தியுள்ளனர்.

தம்புத்தேகம ஹுரிகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணையில்  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி கையிருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் நுகர்வோர் அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பன்றிகள் மற்றும் கோழிகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்பட்ட கொள்கலன்கள் மற்றும் நுகர்வுக்கு பயன்படுத்தக்கூடிய அரிசி இருப்புகளுக்கு சீல் வைக்க நுகர்வோர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அரச பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கத்திட்டம் - அரசின் ஆலோசனையில் என்கிறார் மீள்க...
கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்குப் பிணை...
மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும்...