அரச பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கத்திட்டம் – அரசின் ஆலோசனையில் என்கிறார் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர்!

Thursday, December 29th, 2016

அரச பாடசாலை செயற்றிட்டத்தின் கீழ் முன்பள்ளிகளை உள்வாங்கி அவற்றை ஒரு முறையான செயற்றிட்டத்தின் கீழ் சீரமைக்க அரசு கலந்தாலோசித்து வருவதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் அலிகார் தேசியக்கல்லூரியில் திங்கட்கிழமை இடம்பெற்ற முன்பள்ளி; பாடசாலையின் வருடாந்த பூர்த்தி மற்றும் மின்மினிப் பூங்கா என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உiராயற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கி வழி நடத்தக்கூடிய சிறந்த சமூகத்தைத் தயார்படுத்த சிறந்த முன்பள்ளிகள் தேவை. வசதி படைத்தவர்கள் மாத்திரம் தான் தங்களது பிள்ளைகளை முன்பள்ளிகளுக்கு அனுப்ப முடியும் என்ற போக்கு மாற வேண்டும். பாலர் பாடசாலை ஆசிரியர்கள் சிலர் முறையான பயிற்சியின்றி காணப்படுகின்றனர். எனவே பாலர் பாடசாலைகளில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இருக்கின்றார்களா என்பது பற்றி சிந்தித்து தமது பிள்ளைகளை பெற்றோர் முன்பள்ளிகளில் அனுமதிக்க வேண்டும். இதேவேளை ஆங்கில அறிவை விருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பக்கல்வி முதலே மேற்கொள்ளப்பட வேண்டும் – என்றார்

h

Related posts: