கஞ்சாவை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபருக்குப் பிணை!

Wednesday, May 10th, 2017

நான்கு கிலோக் கிராம் கஞ்சாவைத் தனது உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவருக்கு கடந்த திங்கட்கிழமை(08) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மல்­லா­கம் நீதி­வான் மன்­றின் எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­யில் 4கிலோ கிராம் கஞ்­சாவை உடைமையில் வைத்­தி­ருந்­தார் என்று குற்­றச்சாட்­டில் தேடப்­பட்டு வந்த சந்­தே­க­ந­பர், 2006 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 26 ஆம் திகதி சட்­டத்­த­ரணி ஊடாக பொலி­ஸில் சர­ண­டைந்­தார். இதனையடுத்து அவர் விளக்­க­ ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார். இந்­தக் குற்­றச்­சாட்­டில் இரண்டு பேர் தொடர்­பு­பட்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளில் ஒரு­வர் சம்­பவ தினம் அன்றே பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டார். விளக்கமறியலில் வைக்­கப்­பட்­டி­ருந்த அவர் பிணை­யில் ­விடுவிக்கப்பட்டிருந்தார்.  இரண்­டா­வது சந்­தே­க­ந­பர் பிணை மனுக் கோரியிருந்தார். இது தொடர்­பான வழக்கு யாழ்ப்­பா­ணம் மேல் நீதிமன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு எடுத்­துக் கொள்­ளப்­பட்­டது.

வழக்­கைப் பர­சீ­லித்த நீதவான் குறித்த சந்­தே­க­ந­பர் ஏழரை மாதங்­க­ளாக விளக்­க­ ம­றி­ய­லில் இருந்து வரு­கின்­றார். சந்­தே­க­ந­ப­ரைப் பிணை­யில் விடு­விப­ப­தற்கு அரசசட்­டத்­த­ரணி ஆட்­சே­பனை எது­வும் தெரி­விக்­க­வில்லை. ஆகவே, குறித்த நபரை 50 ஆயி­ரம் ரூபா காசுப்­பி­ணை­யி­லும், தலா ஒரு இலட்சம் ரூபா சரீ­ரப்­பி­ணை­யி­லும் செல்­வ­தற்கு மன்று அனு­ம­தி­ய­ளிக்­கின்­றது என உத்தரவு பிறப்பித்தார்.

Related posts: