ஆலோசனை கோரும் நிதியமைச்சு!
Monday, September 12th, 2016
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்காக ஒக்டோர் முதலாம் திகதி வரை யோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள், சிவில் அமைப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடம் இருந்து யோசனைகளை பெற்றுக்கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வர்த்தக முதலீட்டு திணைக்களம், நிதியமைச்சு கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது budjet2017@mo.gov.lk என்ற மின்னஞ்சலுக்கோ யோசனைகளை அனுப்பி வைக்க முடியும். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட யோசனை நவம்பர் மாதம் 2 ஆம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

Related posts:
இலங்கையில் சிறு வணிக முயற்சிகளுக்கு உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம்!
இளைஞர் தலைமுறையை புதிய தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதற்கு விசேட நடவடிக்கை – ஜனாதிபதி தெரிவிப்பு...
யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வடக்கில் பாரிய திட்டம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
|
|
|


