சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம்!

Sunday, February 5th, 2017

அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களை தானம் செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வீதி விபத்துக்களின் போது மூளைச் சாவடையும் அனைத்து வாகன சாரதிகளினதும் உடல் பாகங்களையும் வேறு நோயாளிகளுக்கு தானம் செய்யும் நடைமுறையொன்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தொடர்பில் அனைத்து வாகன சாரதிகளினதும் விருப்பத்தை அறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வீதி விபத்து ஒன்றின் மூளைச் சாவடையும் சாரதி ஒருவரின் உடல் பாகங்களை பெற்றுக் கொண்டு வேறும் ஓர் அவசியமான நோயாளிக்கு உறுப்பு மாற்று சத்திரசிகிச்சை செய்ய உறுதிமொழி வழங்கும் ஆவணமொன்றில் கையொப்பம் பெற்றுக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் போது அல்லது அதனை புதுப்பிக்கும் போது இது தொடர்பான ஆவணமொன்றில் கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

எனவே சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வது தொடர்பில் விண்ணப்பம் செய்யும் நடைமுறையில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளன.

man-driving-in-car-in-the-city-ride-share-uber-lyft-getaround-zipcar

Related posts: