ஆசிரிய ஆலோசகர் சங்க நிர்வாகிகள் தெரிவு!
 Wednesday, April 18th, 2018
        
                    Wednesday, April 18th, 2018
            வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இத் தெரிவுகள் இடம்பெற்றன.
தலைவராக சி.சிவரூபன், உபதலைவராக ந.ஸ்ரீகாந்தா, பொது செயலாளராக ந.புகழ்ஸ்ரீந்திரன், பொருளாளராக ஜெ.நிசாகர், ஊடகவியலாளராக தயாளன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் 12 கல்வி வலயங்களுக்குரிய வலயப் பிரதிநிதிகளாக 12 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு வலயம் சி.அன்புமணி, யாழ் கல்வி வலயம் செந்தூரன், வலிகாமம் கல்வி வலயம் க.சிவகரன், வடமராட்சி கல்விவலயம் எம்.சுதர்சன், தீவகக் கல்வி வலயம் ரி.கே.பிரபாகரன், கிளிநொச்சி கல்விவலயம் கே.ஜெயக்காந்தன், வவுனியா வடக்கு வலயம் ரவிச்சந்திரன், வவுனியா தெற்கு வலயம் ரி.உதயராஜன், மன்னார் வலயம் எம்.ரவீந்திரன், மடு வலயம் சகாயராஜா, துணுக்காய் கல்வி வலயம் சசிதரன், தென்மராட்சிக் கல்வி வலயம் ஸ்ரீகணேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இக் கூட்டத்தில் வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலுமிருந்து வந்த பெருந்தொகையான ஆசிரிய ஆலோசகர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        