அழுத்தங்கள் வந்தாலும் அபிவிருத்தி நிறுத்தப்படமாட்டாது – அமைச்சர் சாகல ரத்நாயக்க!

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நிறுத்த போவதில்லை என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சில் நேற்று டைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இதுதெர்டர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் உள்ள காணிகள் விற்பனை செய்யப்பட மாட்டாது. அந்த காணிகள் குத்தகைக்கு மட்டுமே வழங்கப்படும். எனினும் குறுகிய அரசியல் நோக்கத்துடன் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார ஆசை கொண்டவர்களும் மக்களை தவறாக வழிநடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 536 பேருக்கு கொரோனா தொற்று - சுகாதார சேவைகள் பணிப்பாள...
கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!
தற்போதைய நெருக்கடியை மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை வழங்குவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறேன்...
|
|