தொழுநோய் பரவும் அபாயம்: பெற்றோர் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

Tuesday, February 7th, 2017

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்டங்களில் அதிகளவிலான சிறுவர்கள் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் மாத்திரம் 140 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொழுநோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன கூறினார்.

இதனால், சிறுவர்களின் சருமத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் குறித்து பெற்றோர் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொழுநோயால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் டொக்டர் பிரியந்த கருணாரத்ன குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இலங்கையில் 1853 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 42 வீதமானவர்கள் மேல் மாகாணத்திலும் 15 வீதமானவர்கள் தென் மாகாணத்திலும் அடையாளம் காணப்பட்டதாக தேசிய தொழுநோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டது

leprosy-bones-110603

Related posts:


தனியார் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பில் வெள்ளிக்கிழமை இறுதித் தீர்மானம் - தொழில்முறை விர...
கடவுச்சீட்டை பெற நாள் ஒன்றுக்கு 3, ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியகல்வ...
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர...