அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!
Tuesday, May 8th, 2018
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு அமைய யா.அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவை இந்த ஆண்டில் முதன்முதலாக ஆரம்பித்து செயற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் 2017 ஆம் ஆண்டில் ஜீ.சீ.ஈ. (சாதாரண) பரீட்சையில் தோற்றி ஜி.சி.ஈ. (உயர்தரம்) கற்கத் தகுதியுடைய மாணவர்களையும் ஏனைய அயற் பாடசாலைகளில் சித்திபெற்று உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கவுள்ள மாணவர்களையும் இணைக்கப்படவுள்ளது.
புதிய பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூரணப்படுத்திச் சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
ரூபா 135 மில். மோசடி; சஷி வெல்கம 22 வரை விளக்கமறியலில்!
பச்சிலைப்பள்ளி மேற்கில் வெடிபொருள்கள் அகற்றப்பட 225 ஏக்கர் விரைவில் விடுவிப்பு!
உலக வங்கியின் நிதியில் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை மறுத்து லிட்ரோ நிறுவனம்...
|
|
|


