25 அகதிகள் இன்று இலங்கை திரும்புகின்றனர் !

Tuesday, October 25th, 2016

கடந்த கால போர் அனர்த்தங்களால் இடம்பெயர்ந்து தமிழக அகதிமுகாமகளில் தஞ்சம் புகுந்திருந்த 25 இலங்கை தமிழ் அகதிகள் இன்று நாடு திரும்புகிறார்கள்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதுதொடர்பாக தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராயலத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இவர்கள் மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலுக்கு அமைய இதற்காக வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மீள்குடியமர்த்தப்படும் மக்களுக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான உலர் உணவுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. அமைச்சு முன்னெடுக்கும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவர்களுக்கான வீடுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை உறுதிப்படுத்துவதற்கான சமிக்ஞையாக அகதிகளின் வருகையை குறிப்பிட முடியும் என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

return-refugees-140916-seithy

Related posts: