அரிசி விலை வேகமாக அதிகரிப்பு!

Wednesday, December 6th, 2017

 

நாட்டிலுள்ள அநேக சந்தைகளில் அரிசியின் விலை வேகமாக அதிகரித்து வருவதாகவும்  கடந்த மூன்று மாதங்களாக இந்த விலை அதிகரிப்பு தொடர்வதாகவும்  நுகர்வோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகளிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரிசி வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கான காரணம் அரிசி விற்பனையில்  ஏற்பட்ட வீழ்ச்சியே என மரதஹமுல அரிசி உற்பத்தியாளர்களின் சங்கத் தலைவர் பீ.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக நாட்டில்  நிலவிய கடும் வறட்சி மற்றும் மழை போன்றவற்றால் மூன்று போகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்களிடம் மேலதிகமாக அரிசி களஞ்சியத்தில் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து  500 இற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: