அம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்குவது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் – இந்திய கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் பேராசிரியர் ஜி.பார்த்தசாரதி

Friday, March 31st, 2017

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளதானது, இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று, புதுடில்லியைச் தளமாகக் கொண்ட கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் வருகை பேராசிரியரான ஜி.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது

பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் சீனாவுடனான தொடர்புகள் இந்தியாவுக்கு முக்கியமானவை. தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகச் சீனா பெரும் பொருளாதார முதலீடுகளின் மூலம் இந்தியாவைச் சுற்றி வளைத்துள்ளது சீனாவின் நிதியில் பெரும் உட்கட்டமைப்பு முதலீகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறிலங்கா கடன்பொறியில் விழுந்துள்ளது கடனுக்குப் பங்குகள் என்ற அடிப்படையில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் இலங்கை கையளிக்கவுள்ளது. இது இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது பாகிஸ்தானில், நோபாளத்தில், அபிரிக்காவிலும் கூட சீனா பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

50 பில்லியன் டொலர் சீனா பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத் திட்டத்தால், இலங்கையின் வழியில் பாகிஸ்தானும் செல்லக்கூடும். சீனாவின் பொருளாதாரம், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 5 மடங்கு பெரியது. அது பாதுகாப்புக்காக இந்தியாவை விட 6-8 மடங்கு அதிகமா செலவிடுகின்றது. சீனாவின் சவாலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் எந்தவோர் அயல் நாட்டுடனும் மோதிக்கொள்வது சரியானதல்ல. அடுத்த 2 பத்தாண்டுகளில் இந்தியா பொருளாதார அபிவிருத்தி மீது கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் ஆனால் தீவிர தேசிய வாதத்தைத் தவிர்க்க வேண்டும் காட்சிப்படுத்தலுக்கு அப்பால் பலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா 15 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது தமிழர்களுக்கு 50ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. 500 உழவு இயந்திரங்களையும், 10ஆயிரம் சைக்கிள்களையும், 90ஆயிரம் விவசாயக் கருவிகளையம் 200 மீன்பிடி படகுகளையும் இந்தியா வழங்கியுள்ளது விமான நிலையங்களைப் புனரமைத்துத் தொடருந்துப் பாதைகளை மீளமைத்துக் கொடுத்திருக்கிறது இலங்கையில் இந்தியா எதைச் செய்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: