அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம்!

யாழ். மாவட்டத்தில் இம்முறை போகத்தின்போது செய்கையாளர்கள் சிலர் அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர்.
உரும்பிராய், சாவகச்சேரி, எழுதுமட்டுவாள் ஆகிய பிரதேசங்களில் இந்த அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு மாவட்ட விவசாயத் திணைக்களத்தினால் சுமார் பத்து வரையிலான செய்கையாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அன்னாசிச் செய்கையை மேற்கொள்வதற்குரிய அன்னாசி உறிஞ்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்கையாளர்களுக்கும் ஆயிரம் வரையிலான அன்னாசி உறிஞ்சிகள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே இப்பிரதேசங்களில் செய்கையாளர்கள் அன்னாசிச் செய்கையில் ஈடுபட்டு வெற்றியளித்ததாக தெரிவிக்கப்பட்டது.
Related posts:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் படுகொலை!
நிலம் தாழிறங்கியதால்50 அடி ஆழத்தில் புதையுண்ட குடியிருப்பு!
இலங்கைக்கு 45,000 டொலர்களை நன்கொடை வழங்கிய அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர்கள்!
|
|