நிலம் தாழிறங்கியதால்50 அடி ஆழத்தில் புதையுண்ட குடியிருப்பு!

Sunday, August 7th, 2016

கினிகத்தேனை, பொல்பிட்டிய பகுதியில், இன்று  காலை  7.30 மணியளவில் நிலம் தாழிறங்கியதன் காரணமாக குடியிருப்பொன்று முற்றாக மண்ணுள்  புதையுண்டுள்ளதாகவும்  அப்பகுதியலுள்ள குடியிருப்புகளில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வீடுகளில் வசித்து வந்தவர்கள் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.

கினிக்தேனை, புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுவதால் ஏற்படும் அதிர்வுகள் காரணமாக, அப்பிரதேசத்தை அண்மித்துள்ள பகுதிகளில் நிலம் தாழிறங்கும் அபாயாம் தோன்றியுள்ளதாகவும் இதனால் தமது வீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில்  கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts:

பட்டதாரி பயிலுனர்களுக்கான பயிற்சிகள் காலவரையின்றி ஒத்திவைப்பு - அரச ​சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ள...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - சதொச நிறுவனத்தின் தல...
ஏப்ரல் 21 தாக்குதல் - சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் பலியானவர்களின் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்ட...