அதிவேகப் பாதையில் வாகனம் நிறுத்தினால் வழக்கு!

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்கள் இல்லாமல் அதிவேகப் பாதைகளில் வாகனங்களை நிறுத்தி வைப்பவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமென தெற்கு அதிவேகப் பாதைக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜனக குணதிலக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அதிவேகப் பாதைகளிலுள்ள சகல பொலிஸ் காவலரண்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாகவும் தொழில்நுட்பக் கோளாறுகளாலோ அல்லது விபத்துக்களாலோ நிற்கும் வாகனங்களைத் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் தேவையில்லாமல் நிறுத்தப்படக்கூடாதெனவும் அவர் கூறினார். கடந்த சில தினங்களில் இவ்வாறான தவறுகளை இழைத்த சாரதிகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
தொலைக்காட்சி நாடகங்களில் பெற்றோர் கவனத்தைக் குறைத்தால் மாணவர் கல்வியில் முன்னேறுவர் - கரைதுறைப்பற்று...
குடும்பங்களிடமிருந்தும் வரி அறிவிட திட்டம்!
சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் - பி...
|
|