தொலைக்காட்சி நாடகங்களில் பெற்றோர் கவனத்தைக் குறைத்தால் மாணவர் கல்வியில் முன்னேறுவர் – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, December 13th, 2016

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப்படும் தொடர் நாடகங்களில் தமக்குள்ள நாட்டத்தை எப்போது பெற்றோர் குறைத்து கொள்கிறார்களோ அப்போதுதான் பிள்ளைகளின் கல்வியில் நாட்டத்தை அதிகரிக்க முடியுமென கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் தெரிவித்துள்ளார்.

கடந்த 11ஆம் திகதி நாளை முல்லைத்தீவு எனும் அமைப்பினர் நடத்திய மாணவர்கள் கௌரவிப்பு, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது இளம் சமுதாயத்தையும் தாய்க்குலத்தையும் திதட்டமிட்ட முறையில் சீரழிப்தற்காகவே சில தொலைக்காட்சி அலைவரிசைகள் இவ்வாறான தொடர் நாடகங்களை ஒளிபரப்புவதால் நாடகங்களுக்கு அடிமையாகும் சில பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வி தொடர்பில் எவ்விதமான அக்றையுமின்றி இருக்கின்றனர். இதனால் மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். எனவே பெற்றோராகிய நாம் ஆடம்பரங்களை விட்டுவிட்ட எமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

unnamed (1) copy

Related posts:

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
வடக்கில் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளைமுதல் முன்னெட...
விவசாய சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளிப்பு!