சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பான வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் பாடுபடுகின்றோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, January 7th, 2022

சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியின் புதிய மூன்று மாடிக் கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

தொழில்நுட்பம் நன்மை தருவதை போன்றே தீமையை ஏற்படுத்தும் என்பதால், சரியானதை தெரிவுசெய்ய பிள்ளைகள் அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச பிள்ளைகளை பெற்றோர் போன்றே ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாடளாவிய ரீதியில் சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், தற்போது 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்து சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

இதேநேரம் கொரோனா காரணமாக வீட்டில் இருந்த பிள்ளைகள் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகி இருப்பதாக பெற்றோர்கள் முறையிடுகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள்கூட எச்சரித்துள்ளனர். தொழில்நுட்பத்தினூடாக நன்மை ஏற்படும் அதேவேளை, தீமைகளும் உள்ளன.

எனவே, தவறான வழியில் செல்லாது தொழில்நுட்பத்தினூடாக நன்மையை மாத்திரம் பெறுவதற்கு பிள்ளைகள் அறிந்துக்கொள்ள வேண்டும்.

சிறுவர்களின் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில், தற்போது 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை சட்டப்படி தடை செய்துள்ளோம்.

அதேநேரம், பாடசாலைக்கு செல்லாத சிறார்களைக் கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டமொன்றையும் செயல்படுத்தி வருவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாடசாலை செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பாடசாலைக்கு அனுப்பும் திட்டமொன்றையும் செயல்படுத்தி வருகிறோம்.

அந்தவகையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, உண்மையான திறமையாளர்களாக எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். சவால்களுக்கு மத்தியிலும் உங்களுக்காக பாதுகாப்பான மற்றும் வளர்ச்சியடைந்த நாடொன்றை உருவாக்குவதற்கே நாம் இன்று பாடுபடுகின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: