அடுத்த வருடம் முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்!

புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தின் மூலமான கொடுப்பனவுகள் அடுத்தவருடம் வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நிதி அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமளவில் கொடுப்பனவுகளை வழங்கக்கூடியதாக இருக்குமென்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தம்மை பதிவு செய்து கொண்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்ற இடத்தில் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட 38 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கு மேலான தொகை இழப்பீடாக வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது!
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுங்கள் –துறைசார் தரப்...
இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்க உலக வங்கி அனுமதி!
|
|
அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை - ...
ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு - சுகாதார சேவ...
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான பிரேரணை அமைச்சர...