சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது!

Saturday, September 3rd, 2016

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்கள் 11 பேர் பருத்தித்துறை மற்றும் செட்டிபாளையம் கடற்பகுதிகளில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறைக்கு அப்பாலுள்ள கடலில் தடைசெய்யப்பட்ட முறைகளில் மீன்பிடியில் ஈடுபட்டு, கடலட்டைகளைப் பிடித்த 7 பேரை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இந்த நபர்கள் கடலட்டைகளை பிடிப்பதற்காக பயன்படுத்திய இரண்டு டிங்கி படகுகள், 21 ஒட்சிசன் சிலிண்டர்கள். உள்ளிட்ட உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களுடன், சந்தேகநபர்கள் 7 பேரும் மேலதிக விசாரணைக்களுக்காக கடற்றொழில் திணைக்களத்தின் பருத்தித்துறை அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை, செட்டிபாளையம் பகுதிக்கு அப்பாலுள்ள கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 4 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்திய இரண்டு டிங்கி படகுகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இரண்டு வலைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருகோணமலை, நிலாவெளி கடற்பரப்பிலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 உள்ளூர் மீனவர்கள் நேற்று (03) கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த மீனவர்களின் நான்கு படகுகளும், சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 13 பேரும் மேலதிக விசாரணைகளின் பொருட்டு குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

3532178000000578-3638147-Taking_love_to_new_heights_After_landing_each_of_the_newlywed_pa-a-43_1465774022612

Related posts: