அடுத்த மாதம் முதல் இணைந்த நேர அட்டவணை! மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!

எதிர்வரும் முதலாம் திகதி முதல் வட மாகாண போக்குவரத்து இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு போக்குவரத்து உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வட பிராந்திய தலைவர் திரு.கபரஹம, பிரதம கணக்காளர்கள், இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் அனைத்து மாவட்டங்களினதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு சில சிறிய மாற்றங்களும் செய்யப்பட்டு இரு தரப்பினரதும் ஒப்புதலுடன் எதிர்வரும் மே மாதம் 01 ஆம் திகதி அமுல்படுத்துவதாகவும், அதன் பின்னர் நேர அட்டவணையின் ஒழுங்குகளைப் பின்பற்றாத பேருந்துகளின் நடத்துனர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Related posts:
நுகர்வோர் அதிகார சபை விசேட நடவடிக்கை!
காற்றுடன் கூடிய காலநிலை இன்றும் தொடரும்!
அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!
|
|