அனைவருக்கும் சுத்தமான குடிநீர் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, June 27th, 2021

அனைவருக்கும் குடிநீர் பெற்றுக்கொடுப்பது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான ஓர் உறுதிமொழி என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச 2025 ஆம் ஆண்டாகும் போது அதனை 79 சதவீதமாக அதிகரிப்பதே எமது இலக்காகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஆரம்பித்த களனி தென்கரை, தெதுரு ஓயா போன்ற பாரிய நீர்வழங்கல் திட்டங்கள், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் முடங்கிய நிலையிலேயே இருந்தன.

எமது தேர்தல் பிரகடனத்தில் குறிப்பிட்டதைப் போன்று, நாம் அதிகாரத்துக்கு வந்த உடனேயே 50 பில்லியன் ரூபாய் நிதியை முதலீடு செய்து, இந்தத் திட்டங்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. அந்தவகையில், 2019ஆம் ஆண்டாகும் போது, 41 சதவீதமாக காணப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கல், தற்போது 52 வீதமாக நாம் அதிகரித்துள்ளோம்.  இதை 2025 ஆம் ஆண்டாகும் போது அதனை 79 சதவீதமாக அதிகரிப்பதே எமது இலக்காகும் என்றும்; அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: