7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றுக்கு அனுப்பப்பட்டார் டக்ளஸ் தேவானந்தா !

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது யாழ். மாவட்ட இறுதி முடிவுகளின் விருப்பு வாக்கு விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தவானந்தா 32,146 வாக்குகளை பெற்று நாடாளுமன்றுக்க 7 ஆவது தடவையாகவும் தமிழ் மக்களால் தமது பிரதிநிதியாக நாடாளுமன்றம் அனுப்பப்பட்டுள்ளார்.
அத்துடன் யாழ் மாவட்டத்தில் மொத்தமாக உள்ள 7 ஆசனங்களுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்
Related posts:
|
|