13ஆவது திருத்தச் சட்டத்தினூடாகவே நிலையான தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 10th, 2017

1987 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதை அப்போது ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழ்த்தரப்பினர் இன்று அதனை ஏற்றுக்கொண்டுள்ளமையானது வரவேற்கத்தக்கதொன்றாக இருந்தாலும் அதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் எமது மக்கள் அவலச் சாவுகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்திரக்கவேண்டியதேவை ஏற்பட்டிருக்காது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாடில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவான 13 ஆவது திருத்தச்சட்டத்தின்மூலம் கிடைக்கப்பெற்ற மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்துவதில் ஆரம்பித்து  கட்டம் கட்டமாக முன்னேற்றம் காணப்படச்செய்யவேண்டும் என்பதே அன்றிலிருந்து இன்றுவரையான எமது அரசியல் நிலைப்பாடாகும். அதனூடாகவே எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை எட்டமுடியும் என்ற நம்பிக்கையை தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

எமத மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வகாணப்படவேண்டுமாயின் முதலில் இருக்கிறதை பாதுகாத்துக்கொள்ளும் அதேவேளை அதிலிருந்து முன்னேற்றம் காணவேண்டியதும் அவசியமானது.

அந்தவகையில் 1987 ஆம் அண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அன்று நாம் நாம் ஏற்றுக்கொண்துபோல ஏனைய தமிழ் தரப்புகளும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் எமது மக்கள் இன்று அரசியல் உரிமைகளுடன் சிறப்பானதொரு வாழ்க்கையை பெற்றுக்கொண்டிருக்க முடியும் என்றார்.

இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் ரட்ணகுமார், கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன் மற்றும் கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசிந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


அரசு வெற்றி மனோநிலையோடு இருந்தபோதும் நான் தமிழ் மக்களின் குரலாக அரசின் கோட்டைக்குள் ஒலித்திருக்கின்ற...
இரணைத்தீவு மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சட்ட ரீதியிலான அனுமதி எப்போது வழங்கப்படும்?  - நாடாளுமன்றில்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு மண்டபத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுக...