விவசாயிகளிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுகின்றனவா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 3rd, 2018

விவசாய மக்களிடமிருந்து உறுதி செய்யப்பட்ட விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படுவதாக அரசு ஊடகங்களில் கூறிவருகின்ற போதிலும், செயற்பாட்டில் அத்தகைய ஏற்பாடுகள் ஏதேனும் நடைபெறுகின்றனவா? எனக் கேட்க விரும்புகின்றேன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான  விவாதம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

தற்போது சுமார் 10 மாவட்டங்களிலிருந்து நெல் அறுவடைகள் கிடைத்து வருகின்ற நிலையில், நெல் கொள்வனவு செய்வதில் அரசு அசமந்தமாக இருப்பதாகவே அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம் தெரிவித்து இருப்பதையும் இங்கு அவதானத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன். இத்தகைய நிலையில் எதிர்காலத்தில் அரிசியின் விலையில் மேலும் அதிகரிப்பினை எதிர்பார்க்க வேண்டி வரும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, உரிய காலங்களில் உரிய நடவடிக்கை எடுத்து, பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாமல், அனைத்துக் காலங்களிலும் வரிகளை அதிகரித்துக் கொண்டிருப்பதில் மட்டுமே நீங்கள் அவதானம் செலுத்துவதாகவே தெரிய வருகின்றது – என்றார்.

Related posts:

கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...
முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!
நக்டா நிறுவனத்தின் தலைமையகத்துக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - செயற்பாடுகளின் விஸ்தரிப்பு தொடர்ப...

எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நட...
தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
போக்குவரத்து நெருக்கடிகளை நிவர்த்திப்பதற்கு ஏற்பாடுகளை செய்துதருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ...