தற்கொலைகளை தடுக்க நுண்கடன்களை இடைநிறுத்த வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Tuesday, March 12th, 2019

நுண்கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை அரசு ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாடு அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்;தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்றையதினம் இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நுண் கடன் பிரச்சினை காரணமாக மிகுந்த பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கின்ற பெண்களை அப்பிரச்சினையிலிருந்து மீட்டெடுப்பது தொடர்பில் கடந்த வரவு – செலவுத் திட்ட வரைபில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. கிராமியக் கூட்டுறவு வங்கிகள், சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக இவர்களை கடன் பொறியிலிருந்து மீட்பதற்கான குறைந்த வட்டியிலான கடன் திட்டம் ஒன்று வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் முன்னோடியாக  ஆரம்பிக்கப்படும் எனக் கூறப்பட்டது. அது எந்தளவிற்கு சாத்திமானது என்பதற்கு எவ்விதமான பெறுபேறுகளையும்  மேற்;படி கடன் சுமைகளுக்கு ஆளானோர் மத்தியில் காணக்கூடியதாக இல்லாத நிலையில், இம்முறையும் படு கடன் நிவாரணத் திட்டமானது கூட்டுறவு, கிராமிய வங்கிகள் மற்றும் சிக்கனக் கடன் கூட்டுறவு சங்கங்களின் ஊடாக தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி நுண் கடன் சுமை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் கடன்களை வழங்கி அதற்கான நிவாரணங்களை வழங்குவது என்பது ‘மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த’ கதையாகவே அமையும் என்பதை நான் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தேன்.

மத்திய வங்கியின் கண்காணிப்பு ஏற்;பாடுகள் வலுவுள்ளதாக அமைந்திருப்பின் இத்தகைய நிதி நிறுவனங்களால் இம் மக்கள் இந்தளவு பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி பெப்லோ பொகொஸ்லெவ்ஸ்கி (Pயடிடழடீழாழளடயளமல) ‘அரசாங்கத்தினால் கடுமையானதும், உறுதியானதுமான கட்டளை கட்டமைப்பொன்று உருவாக்கப்படும் வரையில் நுண் கடன்களை மீளச் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிப்பொன்றினை இலங்கை அரசு விடுக்க வேண்டுமென’ குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.

ஐக்கிய நாடுகள் கவுன்ஸிலின் 40வது அமர்வில் அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அதிக வட்டியுடன் கூடிய நுண் கடன்களை வலுவிழக்கச் செய்து, தாம் இதுவரை செலுத்திய நிதியினை இழப்பீடு என்ற வகையில் கோருவதற்கு பாதிக்கப்பட்டோருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும், அரச வங்கிகள் தமது நிவாரண ரீதியிலான கடன் வழங்கல்களை விரிவுபடுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிய வருகின்றது.

எனவே, இந்த நுண் கடன் பிரச்சினைக்கு இதுவொரு சிறந்த தீர்வாக அமையுமென்றே கருதுகின்றேன். வேண்டுமானால் மேற்படி நிதி நிறுவனங்கள் பாதிப்படையாத வகையில் நியாயமான ஒரு பொறிமுறையினை ஏற்படுத்தவும் முடியும்.

குறிப்பாக நிதி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகைகளுக்கு எமது மக்களால் தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு நியாயமான வட்டியினை உறுதி செய்து, கடனுடன் சேர்த்து அதனை அறவிட்டுக் கொள்வதற்கும், அதனை மீறிய வகையில் அறவீடுகள் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், அத்தொகையினை மீள பாதிக்கப்பட்டோருக்கு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க இயலும்.

இதனை கடன் செலுத்தியோருக்கும், செலுத்த இருப்போருக்குமான ஏற்பாடாக முன்னெடுக்க வேண்டும். அதேநேரம், கடன்களை செலுத்த வேண்டி இருப்போரில் கடன்களை செலுத்த இயலாத நிலையில் இருப்போருக்கென ஒரு நிவாரணத் திட்டம் கொண்டு வரப்பட்டு, அவர்களது கடன்களை அரசு ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாடும் அவசியமாகும் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன்.

Related posts:

உள்ளூராட்சி மன்றங்களில் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக செயற்படுங்கள் - வலிகாமத்தில் செயலாளர் நாயகம் டக்...
வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்...
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...