முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு!

Friday, December 31st, 2021

கிளிநொச்சி, முற்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த பிரதேசத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் குறித்த பிரச்சினைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக,  கிளி முற்கொம்பன் மகா வித்தியாலயத்திற்கு அதிபர் இல்லமால் இருப்பதனை சுட்டிக்காட்டிய பாடசாலை சமூகத்தினர், பொருத்தமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

மேலும், வீதிப் புனரமைப்பு மற்றும் வனவிலங்குகளிடம் இருந்து பயிர்செய்கைகளை பாதுகாப்பதற்கான மின்சார வேலி அமைத்தல், சீரான இணைய வசதிகளைப் பிரதேச மக்கள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

அவை தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற உத்தரவாதத்தினை வழங்கினார்.

அதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்ட அமைச்சர், புதிய வருடத் தவணைக்காக பாடசாலை ஆரம்பிக்கப்படுகின்ற போது குறித்த பாடசாலைக்கு பொருத்தமான அதிபர் நியமிக்கப்படுவார் என்ற உத்தரவாதத்தினையும் வழங்கினார்.

000

Related posts: