அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புன்னைநீராவியடியில் புதிதாக அமைக்கப்பட்ட கடை தொகுதிகள் வர்த்தகர்களிடம் கையளிப்பு!
Thursday, February 29th, 2024
கரைச்சி பிரதேச சபை புன்னைநீராவியடி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட கடைத் தொகுதிகள் இன்றையதினம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த பழைய கடைத்தொகுதிகளுக்கு பதிலாக LDSP (BT2) திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 15 கடைத்தொகுதிகளே இன்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த கடைகள் பிரதேச சபையின் ஒப்பந்த திட்டங்களுக்கு அமைவாக மாதாந்தம் 3000 ரூபா வாடகையின் அடிப்படையில் குறித்த பிரதேச சபை வர்த்தகர்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த கடைகள் வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன
000
Related posts:
குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
உள்ளூர் உற்பத்திகளின் விதைப்பு காலம் முதற்கொண்டே அதே பொருட்களின் இறக்குமதிகளில் கட்டுப்பாடுகள் விதிக...
கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண சாத்தியமான வழிமுறைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் ...
|
|
|


