கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினையை தீர்க்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி!

Wednesday, June 8th, 2022

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் நெருக்கடிகளை தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல், கடலுணவு ஏற்றுமதியாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று நடைபெற்றது.

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும், இதனால் ஆயிரக்கணக்கான படகுகளை தொழிலுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளரினால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று, நீர்வேளாண்மை உற்பத்தியில் ஈடுபடுகின்ற பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினை தொடர்பாகவும் இதன்போது பிரஸ்தாபிக்கப்பட்டது

இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய ஏற்றுமதியாளர்களினால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில்,

கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்,

“சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களுக்கு  தவிர, நாடளாவிய ரீதியில் ஏனைய தொழில் முறைகளை பயன்படுத்துகின்ற கடற்றொழிலாளர்களும் எரிபொருள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுகின்ற நிலையில், அனைவரையும் கருத்தில் கொண்டு எரிபொருள் பிரச்சினைக்கு தீர்ப்பதற்கான மாற்றுப் பொறிமுறைகளை ஆராய வேண்டும்.

நாட்டில் இருக்கின்ற அனைத்து மீன்பிடிக் கலன்களும் தங்குதடையற்ற முறையில் தொடர்ச்சியாக தொழிலில் ஈடுபடுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதன் மூலம் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாப்பது மாத்திரமல்லாமல்,  பொருளாதார நெருக்கடிளில் இருந்து நாட்டை மீட்பதற்கான பங்களிப்பினையும் வழங்க முடியும்.

குறிப்பாக எரிபொருளுக்கு தேவையான டொலர்களை பெற்றுக்கொள்வற்கான ஏற்பாடுகள் உருவாக்கப்படுமானால் சிறப்பானதாக இருக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என்று தெரிவித்தார்.

மேலும், குறித்த எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பான ஏற்றமதியாளர்களின் ஆலோசனைகளை எழுத்து மூலம் வழங்குமாறு ஏற்றுமதியாளர்களை கேட்டுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படு்ம் எனவும் தெரிவித்தார்.

அந்தவகையில், ஏற்றுமதியில் ஈடுபடுகின்றவர்கள்  ஏற்றுமதியளர்களின் மூலம்  மூலம்  இடம்பெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

000

Related posts:

அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டபோதும், தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை...
இலங்கைத் தமிழரது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய இந்திய அரசு முன்வரவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...

செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...
கச்சாய் பிரதேச கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்திப்பு!