வடக்கின் குடிநீர் பிரச்சினையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை! யப்பான் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார்!
Monday, December 16th, 2019
வடக்கு மாகாணத்தில் குடிநீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு யப்பானிய அரசாங்கத்தின் உதவியை கடற்றொழில் நீரகவள மூலங்கள் அமைச்சர் வடக்ளஸ் தேவானந்தா கோரியுள்ளார்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட யப்பானிய வெளிவிவகார அமைச்சர் தொஸிமித்சூ மோட்டிஜிக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்றுமுன்தினம் (13.12.2019) நடைபெற்றது.
இதன்போது, வடக்கில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வைகாணும் நோக்கில் அமைச்சரினால் மேற்குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், கடற்றொழில் அபிவிருத்தி தொடர்பில் அதிககவனம் செலுத்தி வருகின்ற அமைச்சர் அவர்கள், கடற்றொழிலினை இலங்கையில் மேலும் வளப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வகையான பங்களிப்புக்ளையும் யப்பான் அரசாங்கம் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அத்தோடு, கடற்றொழில் ஈடுபடுவோர் அனர்த்தங்களை எதிர்கொள்கின்றபோது, அவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கும் பாதுகாப்பாக மீட்பதற்கும் தேவையான நவீன பொறிமுறையை உருவாக்குவதற்கு தொழில்நுட்ப மற்றும் படகுவசதிகளை யப்பான்வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
வடக்கின்கு டிநீர்பிர்ச்சினை தொடர்பான கோரிக்கையைகவனத்தில் எடுத்துக்கொள்வதாக தெரிவித்த யப்பான் வெளிவிவகார அமைச்சர், அனர்த்தங்களின் போது நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பொறிமுறை தொடர்பாக ஏற்கனவே ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


