பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி மீளக் கட்டியெழுப்பப்படும் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!

Friday, September 13th, 2019


கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்காகி பல நூறு அப்பாவி மக்கள் பலியான  சியோன் தேவாலயத்தின் மீள் கட்டுமாணப் பணிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றையதினம் (13) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இவ் விஜயத்தின்போது கறித்த மாவட்டத்தின் பல பகுதிகளுக்க சென்று நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளதுடன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில்  மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு நேரில் சென்று பாதிப்புக்களை பார்வையிட்டதுடன்  தாக்குதலின் பின்னரான கட்டுமாண பணிகளையும் பார்வையிட்டுள்ளார்.

அத்துடன் தேவாலய நிர்வாகத்தினரையும் சந்தித்து தாக்குதலின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.
இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி தெரிவு: ஜனாதிபதிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு...
குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் ஆராக்கிய உணவகம் - சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் ...

வடக்கு மகாகாண அபிவிருத்தி மந்தகதியாகியிருக்கிறது – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...
இந்திய மக்கள் தற்போது உண்மையைப் புரிந்து கொண்டிருப்பார்கள் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!