அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு யாழ்ப்பாணத்தில் பேரெழுச்சியுடன் ஆரம்பம்!

Monday, February 17th, 2020


கடல்சார் தொழிற்துறையை அபிவிருத்தி செய்து, பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பான மாதர் அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான அங்குரார்ப்பண வைபவம் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் காலை 10 மணியளவில் பேரெழுச்சியுடன் ஆரம்பமானது.


யாழ்ப்பாணம் றீகல் தியேட்டர் சந்தியில் நிகழ்விற்கு வருகைதந்திருந்த அதிதிகள் பொன்னாடை போர்த்தி மலர்மாலை அணிவித்து விழா ஏற்பாட்டாளர்களால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டனர்.


அதன் பின்னர் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விருந்தினர்கள் மண்டபத்தின் நுழைவாயிலில் ஆரார்த்தரி எடுத்து திலகமிட்டு வரவேற்கப்பட்டனர்.


அதன்பின்னர் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்படது.


பின்னர் விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்படட விருந்தினர்கள் சம்பிரதாய முறைப்படி மங்கல விளக்கை ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்துவைத்தனர்.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறும் குறித்த மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வில்
கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ சனத் நிசாந்த, வடமாகாண ஆளுநர் திருமதி பி. சறோஜினி மன்மதராஜா சாள்ஸ், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரட்ணாயக்கா, வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் ஆ.பத்திநாதன் யாழ். மாவட்ட அரச அதிபர் திரு. மகேசன் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், தேசிய நீர் வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் திரு. ஜயந்த விஜயரத்ன மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை போராசிரியர் திரு.நவரட்ணராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Related posts: