தொடரும் சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வடமராட்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Friday, May 22nd, 2020

மருதங்கேணி மற்றும் தாளையடிப் பகுதி கடற்பரபுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடற்றொழிலை தடுத்து நிறுத்தி தமது வாழ்வாதார தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு தருமாறு இரு பகுதிகளின் கடற்றொழிலாளர்களின் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் இரு பகுதி கடற்றொழிலாளர்ககளின் பிரதிநிதிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் வடமாகாண கடற்றொழில் மற்றும் நீரக வள திணைக்களத்தின் பணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்டவர்களை அழைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்வு கூட்டமொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது இருபகுதி கடற்றொழிலாளர் அமைப்பகளின் பிரதிநிதிகள் தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தெரியப்படுத்துகையிலேயே இவ்வாறுகோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்-

கடற்றொழில் அமைச்சால் சில  கடற்றொழில் நடவடிக்கைகளை சட்டவிரோதமானவை என குறிப்பிடப்பட்டு அவற்றை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் அத்தொழில் நடவடிக்கைகளை குறித்த பகுதிகளில் சிலர் தற்போதும் முன்னெடுத்து வருவதால் சாதாரண கடற்றொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

குறிப்பாக இவ்விரு பகுதிகளிலும் உழவு இயந்திரங்களை கொண்டு மேற்கொள்ளப்படும் கடல் தொழில் நடவடிக்கை வெளிச்சம் பாய்ச்சி மேற்கொள்ளும் அட்டைபிடிப்பு  உள்ளிட்ட பல தொழில் நடவடிக்கைகளை இருதரப்பு கடற்றொழிலாளர்களதது ஆலோசனைக்கு அமைய தடைசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதும் அத்தகைய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை குறித்த கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்து வருவதால் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள துறைசார் தரப்பினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இருதரப்பினரது கருத்துக்களையும் ஆராய்ந்தறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்கனவே தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து அத்தகையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள அமைச்சர் அத்தகைய தொழில் நடவடிக்கைகளை கரையோர கடற்படையினரும் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இதனிடையே சுகாதார தரப்பினரது அறிவுறுத்தலுக்கு அமைய நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு கிருமி நாசினிகள் அடிக்கடி தெளிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலஞ்சம் ஊழல் எழுதப்படாத சட்டமாகவே இருக்கின்றது - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்...
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...
ஏற்றுமதி செய்யப்படும் மீன்களுக்கான விலையில் திடீர் வீழ்ச்சி - பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உர...

வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
பிரித்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியும் மலையக மக்களின் உழைப்புச் சுரண்டல் நிறுத்தப்படவில்லை – நாட...
மக்களின் தெரிவுகளே எதிர்காலத் தீர்மானிக்கும்: தீவக மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!