வெற்றி தோல்வி சமமானவை – கிடைக்கும் சந்தர்பத்தை உங்களுக்கானதாக்குங்கள்- அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, April 20th, 2024


…………..
தேசிய ரீதியில் நடைபெறும் ஜனாதிபதி தங்க கிண்ணத்துக்கான கரப்பந்தாட்ட சுற்று போட்டியின் வடக்கு மாகாணத்துக்கான சுற்றுப்போட்டியை சம்பிரதாய பூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார்.

இன்றையதினம் மன்னர் மாவட்டத்தில் மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது குறித்த போட்டியில்  பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்ததுடன்  நிகழ்வுகளையும்சம்பிரதச்ய பூர்வமாக ஆரம்பித்துவைத்திருந்தார்.

டயலொக் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் நடைபெற்றுவரும்  குறித்த தொடரில் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நீதியில் இன்றையதினம் குறித்த போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

இதில்  20 ஆண்கள்  அணிகளும் 4 பெண்கள் அணிகளும் மோதிக் கொள்கின்றன இப்போோட்டியில் முதலிரு இடங்களையும் பெற்றுக்கொள்ளும்  அணிகள் தெரிவு செய்யப்பட்டு தேசிய ரீதியில் நடைபெறும் இறுதிச்சுற்று  போட்டியில் கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்நிகழ்வில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  குலசிங்கம் திலீபன், வடக்கு மாகாண விளையாடி துறை இணைப்பாளர் மனோகரன், மற்றும் வடக்கு மாகாண கரப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் மற்றும் மாவட்டங்களின் தலைவர்கள் மத்தியஸ்தர்கள், வீரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துருந்தமை குறிபிடத்தக்கது,

இதனிடையே போட்டியாளர்களை வாழ்த்திய அமைச்சர் விளையாட்டில் வெற்றி தோல்வி சமமானவை என  சுட்டிக்காட்டியதுடன் கிடைக்கும் சந்தர்பங்களை உங்களுக்கானவையாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும்  வகியுறுத்தியதுடன் கரப்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கட்சி நிதியிலிருந்து நூறாயிரம் ரூபாவை வழங்கியிருந்தமையும் குறிடத்தக்கது.
000

Related posts:

புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுற...
ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வேண்...
நாவாந்துறை பிறீமயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியை ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

நுண்கடன் வழங்கிய நிறுவனங்கள் மீள் செலுத்தும் காலத்தை இயல்புநிலை வரும்வரை ஒத்திவைக்க வேண்டும் - அமை...
கிளிநொச்சி தம்பகாமம் தும்புத் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஆகியோரா...
கடற்றொழில் சார் அதிகாரிகளுடன் தொழில்சார் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையா...