வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோருக்கென பிரவேச வசதிகள் தேவை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, February 21st, 2017

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோர்கள் வசிக்கும் குடும்பங்களுக்கென வழங்கப்படுகின்ற வீடுகளில் அவர்களுக்கான பிரவேச வசதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்  வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் புனரமைப்பு, மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்களிடம் கேள்வி எழுப்பிய செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, அங்கவீனமானவர்கள் பலர் இருக்கின்ற நிலையில், இவர்களில் குறிப்பிட்ட ஒரு தொகையினர் முள்ளந்தண்டுகள் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் இவ்வாறான மக்களில் பலர் மீளக்குடியேறியும், இன்னும் சிலர் மீளக்குடியேறாமலும் உள்ளனர்.

இந்த நிலையில் இம் மக்களுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற வீடுகளில் வலதுகுறைந்தோருக்கான பிரவேச வசதிகள் உள்ளனவா? எனக் கேள்வி எழுப்பியுள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அவ்வாறின்றேல் அதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள வீடுகளில் அவ்வாறான வசதிகள் இன்றேல் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்வருமாறும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Parliament-of-srilanka-1024x683 copy

Related posts:

அந்நியச் செலாவணி ஈட்டலுக்கான வழிவகைகள் இறுக மூடப்பட்டு கிடக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ச...
அதிகாரத்தை யாரிடம் கொடுக்கவேண்டும் என்பதை சிந்தித்து முடிவெடுங்கள் - பாதிக்கப்பட்டதொண்டர் ஆசிரியர்கள...
தீமையிலும் நன்மை காண்போம் - அசாதாரண சூழலையும் வெற்றி கொள்வோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!

மாகாண சபை முறைமையினை எதிர்ப்பவர்கள் மாகாண சபை முறைமைக்குள் வந்திருக்கக் கூடாது - நாடாளுமன்றில் செயலா...
‘படைப் புழு” தாக்கம் போல வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளின் அழிவுக்கும் நஷ்டஈடுகள் வேண்டும் –...
மண்கும்பானில் பாரிய படகு கட்டும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வினால் அங்குரார்ப்பணம்!