சட்டவிரோத கடற்றொழிலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிககைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, February 21st, 2023

வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தல், அனுமதியற்ற சுருக்கு வலை தொழிலில் ஈடுபடுதல் உட்பட  நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிககைகள் தொடர்பாக சம்ந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்ட விரோத செயற்பாடுகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், நீர் மற்றும் மின் கட்டண அதிகாரிப்பினால் ஏற்பட்ட உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் ஜஸ் கட்டிளின் விலையை அதிகரிக்கும் கோரிக்கையை  உற்பத்தியாளர்கள் முன்வைத்துள்ள நிலையில், அதுதொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது

இதேவேளை

எதிர்வரும் 23,24,25 ஆகிய திகதிகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ள நிலையில், குறித்த மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடற்றொழில் செயற்பாடுகள் மற்றும் நீர்வேளாண்மை உற்பத்திகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சிற்கு இன்று வருகைதந்த முன்னாள் அமைச்சர் மில்றோய் பெனான்டோ, சிநேகபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: