விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்டும்! டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Saturday, May 14th, 2016

நாட்டில் இயற்கை பாதிப்புகள் ஏற்படும் காலகட்டங்களில் விவசாய மக்கள் பெற்றுள்ள விவசாயக் கடன்களை அரசாங்கம் இரத்துச் செய்வதுபோல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதார நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் வங்கிகள் மூலமாகப் பெற்றுக் கொண்டுள்ள தொழில்சார் கடன்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் பாராளுமன்றக் கட்டிடத்தொகுதியில் அமைச்சரைச் சந்தித்து யாழ் மாவட்ட கடற்றொழில் மேம்பாடு மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடி, தீர்வுகளை எட்டிய நிலையில் செயலாளர் நாயகம் அவர்கள் மேற்படி விடயத்தை வலியுறுத்தினார்.

யாழ் மாவட்டத்தில் பல கடற்றொழிலாளர்கள் தங்களது தொழில் நிமித்தம் வங்கிகளின் மூலமாக கடன் தொகைகளைப் பெற்று, இன்னமும் அவற்றை மீளச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 இலட்சத்திற்குள்ளான தொகையினையே செலுத்த இயலாத நிலையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானஞ் செலுத்தியுள்ள அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள், இவ்விடயம் அரச கொள்கை சார்ந்த விடயம் என்பதால், அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, அதன் மூலமாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து வர்த்தக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்க வேண்டும் – டக்ளஸ் ...
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
பேசாலை ரின்மீ்ன் ஆலையை மீண்டும் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் அமைச்சர் டக்ளஸ் ...