யாழ். – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை: அமைச்சர் டக்ளசின் முயற்சிக்கு அமைச்சரவை பச்சைக் கொடி!

Monday, June 13th, 2022


……………

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும்,

பலாலி – திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்குமான சாதகமான முடிவுகள் இன்று(13.06.2022) நடைபெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், விரைவில் குறித்த போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதனூடாக மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும் உரம், பால்மா, மருந்துப் பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களையும் தேவையானளவு பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான முயற்சிகளுக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரிவு: கடற்றொழில் அமைச்சர் – 13.06.2022

Related posts:

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அனைவரும் பிரிவினைவாதிகள் அல்லர் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!
மக்களுக்கு பயனுள்ள வகையில் கடற்றொழில் செயற்பாடுகள் அமையவேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...

கர்நாடக வாழ் தமிழர்கள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் யாழில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியப் பிரதமருக...
மக்கள் தமது தொழில் துறைகளை நிம்மதியாக முன்னெடுக்க என்றும் நாம் துணையிருப்போம் - செயலாளர் நாயகம் டக்ள...
காக்கைதீவு மீன் சந்தை மற்றும் இறங்குதுறை சுகாதார முறைப்படி பராமரிக்கப்படுவதில்லை என அமைச்சர் டக்ளஸ் ...