விழிப்புடன் இருங்கள்!…. எம் இனிய மக்களே!… உங்களுடன் ஒரு சில நிமிடங்கள்,..

Wednesday, January 10th, 2018

இது தேர்தல் காலம்!…
உங்கள் வாழ்வும் வளமும் எதுவென
நீங்களே தீர்ப்பெழுதும் காலம்,…

தொடர்ந்தும் உங்கள் வாழ்வு
இருட்டில் மட்டும் தொலைந்து கிடக்கும்
வெறும் பள்ளத்தாக்கில் தானா?…

அல்லது,… உங்கள் வாழ்வு
வெளிச்சம் தரும் இலட்சிய கோபுரத்தின்
உச்சியிலா?…

இதில்,.. எது உங்கள் விருப்பம் என
நீங்களே தீர்மானிக்கும் காலம் இது,…

மக்களுக்காக எதையாவது சாதித்தோம் என்று
மார்தட்டி கூற முடியாதவர்கள்,

எங்கள் சக்திக்கு ஏற்றவாறு முடிந்தளவு
சாதித்தோம் நாம் என்று நிமிர்ந்து நிற்கும்
எங்கள் மீது சேற்றை வாரி தூற்றுவார்கள்..

எதையாவது அவர்கள் சாதித்திருந்தால்,…
அதை வந்து உங்களிடம் சொல்லியிருப்பார்கள்…
ஆகவேதான் மக்கள் எம்பக்கம் அணிதிரண்டு
நிற்பது கண்டு காழ்ப்புணர்ச்சிகளை கொட்டுகிறார்கள்.

எரித்தாலும் கமகமக்கும் சந்தணம் நாங்கள்!.
புதைத்தாலும் முளைத்தெழும் விதைகள் நாங்கள்!!

திட்டமிட்டு எம்மீது வசைகளை அள்ளி வீசி
சரிந்து கிடக்கும் தங்களது செல்வாக்கை இனி
தூக்கி நிறுத்தலாம் என்று கனவு காண்பார்கள்.

அவர்களின் அந்த கனவுகள் இனி ஒரு போதும்
பலிக்காது என்பதற்கு இன்றைய உங்கள் எழுச்சியே சாட்சி!

உங்களில் தெரியும் மாற்றம்
மாற்றத்தை உருவாக்க வல்ல எங்கள் மனங்களில்
நம்பிக்கையை விதைத்திருக்கிறது..
தொடர்ந்தும் விழிப்புடன் இருங்கள்!

நீராக கரைந்து போக நாம் ஒன்றும் ஆற்றில் விழுந்த
உப்புக்கல் அல்ல. மாறாக நாங்கள் காற்றிலும்
கடும் புயலிலும் எழுந்து நடந்து,. சூழ்ந்து வரும்
சூழ்சிகளையும், தொடர்ந்து வரும் தூற்றல்களையும்
ஆற்றலால் எதிர் கொண்டு,. மக்கள் என்ற சமுத்திரத்தில்
என்றும் மீனாக இருப்பவர்கள்!

அவர் சொன்னார்,.. இவர் சொன்னார்,… என்று
நீங்கள் தடுமாற மாட்டீர்கள்!…
எவர் சொல்லும் கருத்தாக இருப்பினும்
அதை உங்கள் சிந்தனையால் சீர்தூக்கி பார்ப்பீர்கள்
என்ற நம்பிக்கை எமக்கு!…

வீணையின் வெற்றியே மக்களின் வெற்றி!
மக்களின் வெற்றியே வீணையின் வெற்றி!!

நன்றி!

என்றும்  உங்கள்
டக்ளஸ் தேவானந்தா!

Related posts:

  பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோ...
‘என்டர்பிரைசஸ் ஸ்ரீ லங்கா’ ஊடாக வடக்கு மாகாணத்தில் இதுவரையில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? – நாடாளு...
தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி ...

புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் இராஜதந்திர ரீதியில் கையாளப்படுகிறது - அமைச்சர் டக்ளஸ்!
வவுனியாவில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்வு!