வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிறேன் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 27th, 2017

வடக்கு கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் வாக்குறுதி வழங்கிய தரப்பினருக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து அதனூடாக நீதிவேண்டி போராடும் உறவுகளின் நியாய தன்மையை எடுத்துரைப்பதாக இந்த போராட்டம் அமையும் என தான் எதிர்பார்ப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று அனுஷ்டிக்கப்படும் பூரண ஹர்த்தால் தொடர்பில் செயலாளர் நாயகத்திடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணாமல் போனோரை கண்டறிவதற்காக காணாமல்போனோர் சங்கம் ஒன்றை தாம் அன்றைய காலகட்டத்தில் அமைத்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளால் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்களுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றையதினம் அனுஷ்டிக்கப்படும் பூரண ஹர்த்தால் காரணமாக குறித்த மாகாணங்களில் இயல்பு நிலை முற்றாக முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஹர்த்தால் வெற்றியடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் த...
நாட்டின் கல்வித்துறை இன்னமும் நவீன தொழிற்துறைகளுக்கு ஏதுவானதாக அமையவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்...
தலைமுறைகளுக்கு சொத்துச் சேர்க்கும் அக்கறை தமிழ் மக்கள் மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெர...