நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் வெல்லப்பட்டதே அன்றி தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016

நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் வெல்லப்பட்டபோதிலும், அதன் மூலமாக தவறான வழிமுறையே தோற்கடிக்கப்பட்டது அன்றி, தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் எமது மக்களிடையே உணர்வு ரீதியாக உறுதியாக நிலைப்படுத்த வேண்டும் – என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் வரவு – செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் எனது கருத்துக்களை முன்வைது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

எமது மக்கள் தமிழர்களாக வாழ வேண்டும் என்பதற்காக இலங்கையர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ, அதே நேரம் இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கவோ விரும்புவதில்லை. எமது மக்கள் தமிழர்களாகவும், அதே நேரம் இலங்கையர்களாகவுமே வாழ விரும்புகின்றனர் என்ற விடயத்தை நான் தொடர்ந்தும் கூறி வருகின்றேன்.

அந்த வகையில் எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய பல விடயங்கள் தொடர்பில் உரிய அவதானங்கள் செலுத்தப்பட்டு, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வெண்டும்.குறிப்பாக, காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளுக்கான பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்தல், காணாமற் போனோர் விவகாரம், யுத்த குற்ற விசாரணைகள் என பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன.

அதிலும் குறிப்பாக, யுத்த அழிவுகளை நினைவுச் சின்னங்களாக்கி பொது இடங்களில் வைத்து, அந்த இடங்களை சுற்றுலா தளங்களாக்கி வருவதால், அதனால் எமது நாட்டு மக்களிடையே – இரு தரப்பு மக்களிடையேயும் பல கசப்பான உணர்வுகளே தொன்றும் நிலையானது நிரந்தரமாக்கப்படுகிறது. எனவே அனைத்தும் பொது இடங்களிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான் தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றேன்.

கடந்த கால யுத்தம் வெல்லப்பட்டபோதிலும், அதன் மூலமாக தவறான வழிமுறையே தோற்கடிக்கப்பட்டது அன்றி, அதன் மூலம் தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் எமது மக்களிடையே உணர்வு ரீதியாக உறுதியாக நிலைப்படுத்த வெண்டும்.

அதே நேரம், தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்புவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை சீர்குழைத்து விடும் வகையில் இந்த நாட்டில் பலர் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் இனங்களுக்கிடையில் சந்தேகங்களை ஏற்படுத்தும் நோக்கில் சில கருத்துக்களைக் கூறி வருகின்ற சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

எனவே, இவை தொடர்பில் உரிய அவதானங்களைச் செலுத்தி, இந்த நாட்டில் உளப்பூர்வமான வகையில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதனை வலுப் பெறச் செய்வதற்கும் அனைவரும் முன்வரவேண்டும் எனவும், அதற்கு இந்த இரு அமைச்சுக்களும் இயன்றவரை செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

14

Related posts:


இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் -  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெ...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
காக்கைதீவு - சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!