கடற்றொழிலின் அபிவிருத்திக்கு நாராவினால் அளப்பரிய சேவை – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Tuesday, March 23rd, 2021

கடற்றொழில்சார் அபிவிருத்திக்காக தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் (நாரா) மாபெரும் சேவையாற்றுவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாரா நிறுவனத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளபப்ட்ட அதிகாரிகளுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (22.03.2021) கொழும்பு மட்டக்குளியிலுள்ள நாரா நிறுவனத்தில் இடம் பெற்றது.  இங்கு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:

கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் நாரா நிறுவனம் இத்துறையின் அபிவிருத்திக்காக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அவ்வாராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளின் பிரகாரம் கடற்றொழில் துறையை அபிவிருத்தியை நோக்கி நகர்த்தலாம் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்காக கடற்றொழில் துறை பாரிய பங்களிப்பை வழங்கி வரும் நிலையில் நாராவில் நிலவும் ஊழியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இவ்வாறு அரசாங்கம் நியமனங்களை வழங்குவதன் நோக்கம், நாரா நிறுவனத்தின் பணிகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காகவே எனவும் தெரிவித்தார்.

ஆகவே எமது எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இன்றைய தினம் புதிதாக நியமனங்களை பெற்றுக் கொள்பவர்கள் தமது கடமையை செவ்வனே செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர உறையாற்றுக இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கஇ ராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜயந்த சந்திரசோமஇ நாரா நிறுவனத்தின் தலைவர் பேரசிரியர் நவரட்னராசா மற்றும் பணிப்பாளர் நாயகம் பாலித்த கித்சிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Related posts:

நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் - முல்லைத்தீவு மக்கள் பிர...
இளைய தலைமுறையி்ன் மனமாற்றத்துடனான வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது -நானாட்டான் பிரதேச மக்கள் சந்திப்பில...
அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்ட...

போராளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைப்பேன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதெரிவிப்பு
நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும் - எமது மக்கள் சார்ந்த நல்ல விடயங்களுக்காக ஜனாதிபதிக்கு தேவையான ஒத்...
முல்லை மாவட்டத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மா...