நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் – முல்லைத்தீவு மக்கள் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

Sunday, September 18th, 2016

தமிழ் மக்களுக்கு ஒரு நீடித்த அரசியல் உரிமையை பெற்றுத்தரக்கூடிய தலைவராக நடைமுறை சார்ந்ததாகத் தாங்கள் மட்டுமே அயராது உழைத்துவருகின்றீர்கள் என நாம் மனப்பூர்வமாக நம்புகின்றோம். அதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயநலப் பீடிப்பிலிருந்து விடுபட்டு எமது மக்களது எதிர்கால வாழ்வியலுக்கான தேடலையும் உரிமையையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் பெற்றுத்தரக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் உங்களை நாடி வந்துள்ளோம் என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்றையதினம்(18) வருகைதந்திருந்த குறித்த பிரதிநிதிகள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் தமது பகுதி வாழ்வாதாரம் தொடர்பாகவும் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் –

எமது பிரதேசத்தினதும் மக்களினதும் குறிப்பாக முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதார நிலைமைகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கடந்த காலங்களில்  எமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீதே அதிக நம்பிக்கை இருந்துவந்ததனால் அவர்களுக்கே நாம் வாக்களித்து அவர்களை தேர்தல் காலங்களில் வெற்றிபெறச் செய்தோம். இதன்காரணமாக மாற்றுக் கருத்துக்களைக்கொண்ட ஏனைய கட்சிகளை ஒரு தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் வரவேண்டி இருந்தது.

யாழ்.மாவட்டம் இன்று கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தியிலும்சரி மக்களது வாழ்வியல் மேம்பாட்டிலும் சரி ஒரு சிறப்பான நிலையில் இருப்பதற்கு நீங்கள் கடந்தகாலங்களில் எடுத்துக்கொண்ட இணக்க அரசியல் வழிமுறைதான் காரணமாயிருந்தது என்பதை எம்மால் தற்போது உணர்ந்துகொள்ள முடிகின்றது. எமது வாழ்வியலில் கற்றுக்கொண்ட பாடங்களினூடாக இன்று ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்குள் வருவதற்கு நாம் தயாராகிவிட்டோம் என்றும் சுட்டிக்காட்டினர்.

எமது வாழ்வாதாரத்தையும் வாழ்வியல் சூழலையும் ஒட்டுண்ணிக் குழுக்களாக இருந்து உறிஞ்சி தமது தேவைக்கான குறுகிய சுயலாப அரசியலை செய்துவரும் கூட்டமைப்பினரை இனியும் நம்ப நாம் தயாராக இல்லை. இதனால் நீண்டகாலமாக யதார்த்த வழியில் நின்று மக்களுக்காக எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி அயராது பெரும்பணியாற்றிவரும் டக்ளஸ் தேவானந்தாவிடம் எமது சுமைகளை கொடுக்கின்றோம் என்பது மட்டுமல்லாது அதனை அவர் சுமந்து செல்வதற்காக எமது பரிபூரணமான அரசியல் ரீதியான ஆதரவினையும் வழங்கதீர்மானித்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

77

Related posts: