இளைய தலைமுறையி்ன் மனமாற்றத்துடனான வருகை மகிழ்ச்சி அளிக்கின்றது -நானாட்டான் பிரதேச மக்கள் சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 10th, 2020

காணிகளுக்கு உறுதி விளையாட்டு மைதானத்திற்கு புனரமைப்பு புதிய தொழில் முறைக்கு ஏற்பாடு போன்ற மக்களின் வாழ்கை தரத்தனை உயர்த்துலதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீணை சின்னத்தில் போட்டியிடுபவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம், தேவன்பிட்டி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்கள் இதுவரை ஆற்றில் போட்டுவிட்டு குளத்தில் தேடிக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே காணப்படுகின்றனர். ஆனால் அத்தகைய நிலை இனியும் தொடரக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

நீண்டகாலம் தொடர்ந்துவந்த அழிவு யுத்தத்திற்கும் அதன் பின்னரான காலத்தில் அரசியல் வாதிகளின் பாரபட்சங்களுக்கும் இந்த மன்னார் மாவட்டம் உள்ளாக்கப்பட்டுள்ளமையால் அந்த மக்களின் தேவைப்பாடுகள் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.

இவற்றையெல்லாம் தீர்த்துவைப்பதற்கான பொறிமுறையும் நம்பிக்கையும் எம்மிடம் உள்ளது. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கான அரசியல் அதிகாரங்கள் இன்னமும் எமக்கு முழுமையாக தமிழ் மக்கள் வழங்காமையால் நிறைவேறாது இருக்கின்றன.

அத்துடன் எம்மிடத்தே நம்பிக்கையோடு வருகின்றவர்களின் நம்பிக்கை வீணாகாது நம்பிக்கையோடு நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களியுங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கின் அபிவிருத்தி குறித்து என்னிடம் கேள்வி கேட்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எவருக்கும் அருகத...
குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோ...
‘இழப்பீட்டு அலுவலகம் வெகுவிரைவில்’ என விளம்பரங்களில் காட்டப்பட்டு வருகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் ...

குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் - நாடாளுமன்றில் செயல...
தேசிய இனங்களின் சமத்துவமும் தேசிய பாதுகாப்பும் இரட்டைக் குழந்தைகளே! – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
யாழ் போதனா வைத்தியசாலை எதிரகொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவேன் - -வைத்தியர் பிரதிநிதிக...